கந்தளாயில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
கந்தளாயில் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு அண்மித்த பகுதியில் நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 60 கிராம் போதைப்பொருளுடன் இருவர் அக்போபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.