வீட்டிலிருந்து புறப்பட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமைக்காக பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
உயிரிழந்தவர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த மட்டக்களப்பு நாவற்குடா, இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் அவர் பாண்டிருப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam