மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் இன்றைய தினம் (29.06.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய இ.ஜி.சஜிந்த றங்கண என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழப்பு
உயிரிழந்தவர் இன்றைய தினம் சின்னவத்தை பகுதியில் தான் மேற்கொண்டிருந்த வேளாண்மைச் செய்கையை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது, வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
