தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
பெந்தோட்டை - தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த சிசுவிடம் வித்தியாசம் காணப்பட்டதையடுத்து, பெந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெந்தோட்டை பொலிஸார் விசாரணை

இதனை தொடர்ந்து பெந்தோட்டை வைத்தியசாலையினால் இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் பெந்தோட்டை பொலிஸாரும் பஹல்கமஹா மரண விசாரணை அதிகாரி கே.வி.டி.உபாலி குமாரசிங்கவும் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri