சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது(Video)
சட்டவிரோத பொருட்களுடன் ஈரற்பெரியகுளம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா-ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று(03.10.2022) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வத்தளைக்கு பயணம் செய்த லொறியை ஈரட்டை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
சட்டவிரோத பொருட்கள்
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து 3800 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் 250மில்லி லீட்டர் அளவுடைய 519 விவசாய கிருமிநாசினி மருந்து போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமான பொருட்களை கொண்டு சென்ற, நீர்கொழும்பை சேர்ந்த 43 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
