75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 75 பேர் கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவை, ஹோமாகமை, கட்டுகொட, கொஸ்கமை, மடபாத்த, பாதுக்க, பரக்கடுவ, வெல்லப்பிட்டிய, கொலன்னாவை, நுகெகொடை, கல்கிஸ்சை மற்றும் காலி ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதுடன் அதிலேயே இந்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று பேருக்கு அதிகமான வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் திரிபு தொற்றியுள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்புவியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் பழகிய நபர்களை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரோன் வைரஸ், இலங்கையில் பிரதான வைரஸ் தொற்றாக மாறியுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 46 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
