ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைக்கெடுபிடி
வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக செல்லும் வாகனங்கள் மீதான சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று மாலை (17.04) மரம் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று இராணுவத்தினர் வழிமறித்த போது நிறுத்தாது இரு இராணுவத்தினர் மீது மோதியதுடன், அங்கிருந்து தப்பிச் சென்று பாலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாயிருந்தது.
இதில் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்திருந்ததுடன், வாகனச் சாரதி தப்பியோடியிருந்தார்.
இதனையடுத்து, குறித்த இராணுவ சோதனைச் சாவடி ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், சில மணிநேரம் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த இராணுவ
சோதனைக் கெடுபிடிகளால் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri