யாழில் கோவிலுக்குச் சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலுக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி இரவு 7 மணிக்கு நல்லூர் கோயிலுக்குச் செல்வதற்காக யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியைக் கடந்தபோது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.
விபத்துக்குள்ளாகிய அவர் மயங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அவர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்லூர் குறுக்கு வீதியைச் சேர்ந்த இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது - 74) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த மரணம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri