ஈரானுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தை: 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த எண்ணெய் விலை
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், அந்நாட்டின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, இன்று(27) எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வாராந்த சரிவை நோக்கிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
15 அம்ச அமெரிக்க முன்மொழிவு
ப்ரெண்ட் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பேரலுக்கு 84 சென்ட்கள் அல்லது 0.8வீதம் சரிந்து 107.17டொலராகக் குறைவடைந்துள்ளன.
அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பேரலுக்கு 1.02 அல்லது 1.1வீதம் சரிந்து 93.46டொலராகக் குறைவடைந்துள்ளன.

எண்ணெய் உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் எந்தவொரு நேரடி சேதமோ அல்லது நீடித்த மோதலோ, சந்தைகளை விரைவாக விலையை உயரச் செய்ய நிர்பந்திக்கக்கூடும் என்று பிலிப் நோவாவின் ஆய்வாளர் பிரியங்கா சச்தேவா கூறினார்.
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை இடைநிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்த அதேவேளையில், அமெரிக்காவும் மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியுள்ளது.
மேலும், ஈரானின் மூலோபாய எண்ணெய் மையமான கார்க் தீவைக் கைப்பற்ற தரைப்படைகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பது குறித்தும் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மூலம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட 15 அம்ச அமெரிக்க முன்மொழிவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது" என்று ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
போர் ஜூன் இறுதி வரை நீடித்தால்...
இந்தப் போரினால் உலகளாவிய விநியோகத்திலிருந்து ஒரு நாளைக்கு 11 மில்லியன் பீப்பாய் எண்ணெய் குறைந்துள்ளது.
மேலும், இந்த நெருக்கடியானது 1970களின் இரண்டு எண்ணெய் நெருக்கடிகளையும், ரஷ்யா-உக்ரைன் எரிவாயுப் போரையும் சேர்த்ததை விட மோசமானது என்று சர்வதேச எரிசக்தி முகவரகம் விவரித்துள்ளது.

போர் விரைவில் முடிவுக்கு வரத் தொடங்கினால், வரும் மாதங்களில் எண்ணெய் விலைகள் வேகமாக வீழ்ச்சியடையும், ஆனால் அவை போருக்கு முந்தைய நிலைகளிலேயே நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், போர் ஜூன் இறுதி வரை நீடித்தால், விலைகள் 200 டொலர் வரை உயரக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam