வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது: டக்ளஸ் தேவானந்தா

Douglas Devananda Sri Lanka Fisherman
By Kajinthan Mar 15, 2024 01:14 PM GMT
Report

எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

உடனடி  தீர்வு 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை தொடர்பாக இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்படுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரம் எமது நாட்டுக்கு புராதனப் பெருமை மிகுந்த கடலுடன் தொடர்புடைய வரலாறு உள்ளது. ஏராளமன மீன் வளங்களையும் அது எமது கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறது.

வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது: டக்ளஸ் தேவானந்தா | Oceans Resources Also Present Challenges Douglas

இருந்தாலும் கடலானது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய சவால்களையும் அது ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மீன்கள் அருகி வருவது தொடர்பாக நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

அதிகளவில் மீன்களைப் பிடித்தல், சமுத்திரம் வெப்பமடைதல், கடல் மாசடைதல், கடலின் சுற்றாடல் பாதிப்படைதல், அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத சட்டவிரோத கடற்றொழில் முறைகள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா. உணவு மற்றும் விவசாய கடற்றொழில் அமைப்பின் (FAO) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் கிடைக்கும் பணமும் சலுகைகளும்

அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் கிடைக்கும் பணமும் சலுகைகளும்

சட்டவிரோத நடவடிக்கைகள் 

இது எமது கடற்றொழிலளர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதிக்க வில்லை. கடலின் ஒட்டுமொத்த சுற்றாடலின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறித்த பிரச்சினையை வெற்றி கொள்வதற்காக நான் நீர் வேளாண்மை மற்றும் கடல் வேளாண்மை மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த சுற்றாடல் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் கடலுணவு உற்பத்தி அதிகரித்துள்ளது.

வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது: டக்ளஸ் தேவானந்தா | Oceans Resources Also Present Challenges Douglas

இதற்கு புறம்பாக கடந்த பல வருடங்களாக பாரிய பிரச்சினைகளை எமது கடற்றொழில் சந்தித்து வருகிறது. குறிப்பாக வடமாகாண கடற்பிராந்தியத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

இதனால் கடலின் சுற்றாடல், உயிரினங்கள், மீன்களின் சினை முட்டைகள், பவளப்பாறைகள் அழிக்கப்படுவதுடன் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

முப்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட முடிவு

முப்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட முடிவு

கடல் பாதுகாப்பு

இதேநேரம் பாரிய இந்திய இழுவைப்ப படகுகளின் தொடர்ச்சியான வருகை காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் மீன்கள் மற்றும் இறால்களை மற்றும் பிடிப்பதில்லை மீன் குஞ்சுகளையும் அழித்து விடுகிறார்கள்.

இதனிடையே எமது நாடு இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தின் கேந்திர நிலையத்தில் அமைந்திருப்பதால் கடல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகிறோம்.

வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது: டக்ளஸ் தேவானந்தா | Oceans Resources Also Present Challenges Douglas

சட்டவிரோத ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடற்கொள்ளை என்பன நாங்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களாகும். துரதிஷ்டவசமாக ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை இவ்விடயத்தில் நாங்கள் செயற்படுவதற்கு தடையாக உள்ளது.

காலநிலை மாற்றமானது தற்போது மற்றொரு அச்சுத்தலாகும். கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால் எமது கரையோர கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படும் அதேவேளை கடல் வெப்படைதல் கடலின் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிலைபேறான கடற்றொழிலை உறுதிப்படுத்துவதற்கும் கடலரிப்பை தடுப்பதற்கும் செயல் திறன்மிக்க அணுகுமுறை தேவை. இலங்கை பொருளதாரத்தில் முதுகெலும்பாக கடற்றொழிலை மாற்றுவதற்காக நீலப் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கைகளை நாங்கள் வகுத்துள்ளதுடன் அதற்காக நிபுணர் குழுவையும் நாங்கள் நியமித்துள்ளோம்.

இந்நிகழ்வில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் கடற்றொழில் வரைபின் பிரதியொன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாத் பைண்டர் அமைப்பின் தலைவர் மற்றும் தூதுவர் பேர்னாட் குணதிலக்கவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US