வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா..
நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், பிரதான வீதிகள் சில மழை நீரினால் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொரு நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து சில மணித்தியாலயத்திற்கு மேல் முற்றாக தடைப்பட்டிருந்தது.

இதேவேளை நுவரெலியா - உடபுசல்லாவ, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது.
மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட், கிளாரண்டன், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri