சுகாதார அமைச்சு முன்பாக இடம்பெறவுள்ள போராட்டம்
சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (26.09.2023) பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாதியர்களின் யாப்பில் இரகசியமாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் நடவடிக்கைக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தைத் தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ளவுள்ளனர்.
யாப்பில் இரகசியமாகத் திருத்தங்கள்
இது தொடர்பில் அகில இலங்கை தாதியார் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்துத் தெரிவிக்கையில்,

தாதியர் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத்
தீர்வு காண வேண்டிய நிலையில், அதிகாரிகள் தாதியர் யாப்பில் திருத்தங்களை
மேற்கொள்ளும் வரைவை இரகசியமாகத் தயாரித்துள்ளனர்.
அந்த நடவடிக்கை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam