சாதாரண மக்களை ஏமாற்றிய அநுர! நுகேகொட பேரணியில் நாமல் ஆவேசம் - LIVE
இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவோம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப்போட இணைந்து கொண்டனர்.
தாங்கள் தேர்தலில் வெற்றிபெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அந்த வாக்குறுதிகளை புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பைக் கொடுத்துள்ளது.
மறுபக்கம் அரச ஊழியர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அரச ஊழியரகளை பழிவாங்கும் செயற்பாடுகளை தீவிரமாக இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், தங்களுடைய அரசியல் தேவைக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொண்ட இந்த அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri