சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவோம்: மகிந்த ஜயசிங்க
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினராக மகிந்த ஜயசிங்க கடமையாற்றி வருகின்றார்.
சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்குள் பிரவேசித்துவிட்டதாகவும் அதிலிருந்து வெளியேற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் முயற்சிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் சில காலம் பயணிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் முகாமைத்துவத்தைப் போன்றே பொருளாதாரத்தை மீட்பதற்கும் திட்டங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டரை லட்சம் கைத்தொழில் முயற்சிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam