அரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
குருணாகல் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் பலமே ஒட்டுமொத்த உலகின் மிகப் பெரிய பலம் என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளை நிரப்பி எந்த நாளும் ஆட்சியில் நீடிக்க முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வது புதிய விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த விடயத்தை அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளை நிரப்புவதனால் பிரச்சினைகளை மூடி மறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சேவை செய்ய முடியாத காரணத்தினால் இந்த விடயங்களை அரசாங்கம் செய்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் நாட்டுக்கு பாரிய சேவையை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார் எனவும் அவர் பதவியில் நீடித்திருந்தால் இந்த நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது எனவுமு; அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி இந்த நாட்டுக்கு சாபமாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் தேவையான வகையில் சட்டத்தை வளைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் பொய்களை கேட்க மாட்டார்கள் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 40 நிமிடங்கள் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
