ஒரு வருடத்திலேயே 33வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றம்.. பிரபு எம்பி பெருமிதம்
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 33வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளற்ற மக்கள், வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வீடுகளை திருத்துவதற்குமான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(26-01) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
வரவு - செலவு திட்டம்
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் இறுதிக்கட்டத்தினை அடைந்து அதனை மக்களிடம் கையளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு எங்களது முதலாவது வரவு செலவு திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பலவேலைத்திட்டங்கள் பூர்த்திசெய்யப்பட்டுவருகின்றன.
இதேபோன்று 2026ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் ஊடாகவும் உட்கட்டமைப்புக்கு என பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளோம்.
வீடமைப்பு திட்டம் ஊடாகவும் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தின் ஊடாகவும் பலவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன:று கிழக்கு மாகாணசபைக்கூடாக ஒதுக்கப்பட்ட நிதிகள் ஊடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.






ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam