உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நீதிமன்றத்தால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட சில வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
அதன் பிரகாரம் பிறப்புச் சான்றிதழ், சமாதான நீதவான் உறுதிப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07ஆவது உபசரத்தின் பிரகாரம் சத்தியப்பிரமாணத்தில் ஏற்பட்டுள்ள தவறுகள் என்பன காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று குறித்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |