சேதனப்பசளைகளுடன் கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது!அரசாங்கம் அறிவிப்பு
பக்றீரியாவை கொண்டுள்ள நிலையில் சேதனப்பசளைகளுடன் வந்துள்ள கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே பக்றீரியா தொற்றுடன் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சேதனப்பசளைகள் மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படமாட்டாது. அத்துடன் அதற்குரிய பணம் செலுத்தப்படமாட்டாது.
இந்த நிலையில்,எதிர்காலத்தில் இலங்கைக்கு எடுத்து வரப்படும் சேதனப்பசளைகள் தொடர்பில் மூன்றாம் தரப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ,சேதனப்பசளைகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்தின் பணிப்பாளர், இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எர்வினியா மாசுபாடு உறுதி செய்யப்பட்டால், விநியோகஸ்தரான தமது நிறுவனம், நிபந்தனையின்றி சீனாவிற்கு பொருட்களை கொண்டு செல்ல தயாராக இருக்கின்றது.
எனினும் எர்வினியா மாசுபாடு இல்லை என்றால்,கொள்வனவாளர் நிபந்தனையின்றி
பொருட்களை ஏற்றுக்கொண்டு பணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.





மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
