இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது:கனடா விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் பொருளாதாரம் மோசடைந்து வருவதாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் எந்த நேரத்திலும் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கனடா தனது பிரஜைகளுக்கு வழங்கியுள்ள பயண அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கைக்கு பயணம் செய்ய தயாராக இருக்கும் மற்றும் இலங்கையில் தங்கி இருக்கும் கனேடியர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் கனடா தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு, அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியேற்படும் எனவும் தேவையான அளவு இந்த பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறும் கனடா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.