நாளை பாடசாலை நடைபெறும் : கல்வியமைச்சு அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளையும் (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்நிலையிலேயே நாளைய தினம் வழமைப்போன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று (26) கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
