மாகாணசபைகளை ஒழிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மாகாணசபை முறைகளை ஒழிப்பது தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும், முழுமையான அதிகார பரவலாக்கல் மூலமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர்.
அமைச்சர் சரத் வீரசேகர அதிகார பரவலாக்கலுக்கு எதிராக பேசினாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முழுமையான அதிகார பரவலாக்கல் மூலமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என நான் நீண்டகாலமாக அமைச்சரவையில் கூறி வருகிறேன்.
மாகாணசபைகளை ஒழிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
இதனால், விரல் அளவுக்கு வீங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அமைய தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய பலத்தை அந்த மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தான் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.





இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
