பனைசார்ந்த உற்பத்தியாளர்களுக்கான விசேட செயற்றிட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை: டக்ளஸ்
“வடமாகாணத்தில் பனைசார்ந்த உற்பத்தியாளர்களின் ஜீவனோபாயத்தினை மேலும் வலுப்படுத்த விசேட செயற்றிட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வீழ்ச்சியடைந்துள்ள பனைசார் உற்பத்தி
“கடந்த காலங்களில் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் தென்னை பனை உற்பத்தி சார்ந்த உற்பத்தியாளர்கள் பாரிய வீழ்ச்சியினை கண்டுள்ளனர்.
குறிப்பாக கோவிட்தொற்று நிலைமை காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எற்றுமதிக்கான தரவிலைநிர்ணயம் கேள்விக்குறியாக காணப்பட்டாலும் அது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அன்னிய செலவானியின் வருமானம் குறைவாக இருந்தமை இதற்கு காரணமாக காணப்படுகின்றது.
விசேட செயற்றிட்டம்

அந்தவகையில் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு தகுந்த வருவாயினை பெற்றுக்கொடுத்து அதற்காக சந்தைப்படுத்தலுக்கான எற்றுமதியினை எற்படுத்தி ஜீவனோபாயத்தினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன,
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பெருந்தோட்ட
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின்
தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட
அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
