மாநாட்டுக்கு வராத வடக்கு மாகாண ஆளுநரால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை(Photos)
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்றைய தினம் (29.06.2023) இடம்பெற்றது.
யாழ்.நல்லூரில் ஆரம்பமான மாநாட்டுக்கான பேரணியானது யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்த நிலையில், தேசியக்கொடி ஏற்றுவதற்காக பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் வராதமையால் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களும் மக்களும் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொடியேற்ற தாமதம்

இதேவேளை ஆளுநர் வருவாரா? வரமாட்டாரா? என்ற தகவல் வழங்கப்படாத நிலையில் ஏற்பாட்டாளர்கள் தடுமாற்றமடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் ஆளுநர் வருகை தராத சூழ்நிலையில் இலங்கை தேசிய கொடியினை யாழ்.மாநகர ஆணையாளர் ஜெசீலன் ஏற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக
செயலாளர் இளங்கோவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri