வவுனியா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி
வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சுகாதாரப் பிரிவினருக்கு ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று (24.06) தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் எம் ஊடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக ஏற்றப்படுகின்றன. அவை இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படுவதாக அறிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா ஆடைத் தொழிற்சாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில் அது குறித்து ஏதும் தெரியாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலையில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவனும் இராணுவத்தினருடன் இணைந்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam