வடக்கு, கிழக்கை இலக்கு வைத்து திட்டங்கள்! நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்
ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக்களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய, கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பல திட்டங்கள் கொண்ட இந்த ஆவணத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்சவிடம் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதி இந்த ஆவணத்தை கையளித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு என்றில்லாமல் தெற்கில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புதல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் தொழிற்சாலைகள், தலைமன்னார் முதல் இந்தியா வரையான கடல் வழிப்பாதை, வடக்கு, கிழக்கு மக்களது வாழ்வாதாரம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், காணாமல்போனோர் பற்றிய நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடங்கியதாக இத்திட்டத்தை நேற்று பஞ்சலிங்கம் கந்தையா கையளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam