காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
காணாமலாக்கப்பட்டோர் எவரும் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால் தான் காணாமல் போன குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக இரண்டு லட்சம் ரூபாவை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரங்களை உணர்வுகளை நாம் புரிந்துக்கொள்கிறோம். அவர்களை நாம் மதிக்கின்றோம்.
உறவுகளை தொலைத்த துயரத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற ஏக்கத்துடன் வாழும் குடும்பங்கள் நீதி கேட்டு அரசுக்கு எதிராக போராடுவதில் நியாயம் இருக்கின்றது.
ஆனால் அவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தமது சுயஇலாப அரசியலை மேற்கொள்கின்றார்கள். இது கவலைக்குரிய விடயம்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 16 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri