வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனு தாக்கல் (photo)
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (20.01.2023) வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தானின் தலைமையில் வேட்புமனுவை கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று (20.01.2023) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நல்லூர்
இதற்கமைய யாழ்.நல்லூரில் களம் இறங்கும் முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று (20.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (20.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
