இந்திய-பாகிஸ்தானிய சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லை! ஜெய்சங்கர் அறிவிப்பு
நேரடியான இருதரப்பு இணக்கத்தின் விளைவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் அமெரிக்க மத்தியஸ்தம் எதுவும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலையீட்டிலேயே, சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ஜெய்சங்கரின் கருத்து வெளியாகியுள்ளது.
தாக்குதல்
நெதர்லாந்துக்கு சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியா பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அவர்கள் பாகிஸ்தானிலேயே இருந்தனர். எனவே பாகிஸ்தானில் உள்ள அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சண்டையை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தரப்பே முதலில் அறிவித்தது. இதனை இந்தியாவும் ஏற்றுக்கொண்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காஸ்மீரின் ஒரு பகுதியை, 1947 - 48 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. எனவே, இந்த பகுதியை விட்டு வெளியேறும்படி அவர்களுடன் பேச விரும்புவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
