டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை - வணிகத்தரப்பினர் குற்றச்சாட்டு
டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கு இதுவரை காலமும் நிவாரணம் வழங்கப்படவில்லை என தேசிய வணிகர்களை வலுவூட்டுவதற்கான அமைப்பின் செயலாளர் புஷ்பகுமார கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கான இழப்பீடு தொடர்பாக அதே நாளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை அரசாங்கம் இரத்து செய்துவிட்டு, மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இழப்பீடு வழங்காமை
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களின் திறமையின்மையையும் தகுதியின்மையையும் தெளிவாகக் காட்டுகிறது.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தேசிய வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைத்து 2026 ஜூன் 3ஆம் திகதி அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அதே நாளில் மற்றொரு சுற்றறிக்கை மூலம் அதை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆட்சியாளர்கள் பின்பற்றும் இதுபோன்ற இரட்டைக் கொள்கைகளால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்ளூர் வணிக சமூகம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வணிகர்கள் மிகவும் நெசருக்கடியான நிலையில் உள்ளனர். பொறுப்பற்ற முறையில் சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அதிகாரப்பூர்வ அரசு நிறுவனமான சமாகம்மெதுர அலுவலகத்தில் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..! தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14