1988-89 தலதா மாளிகை தாக்குதல் தொடர்பில் பதிவுகள் இல்லை : நாடாளுமன்றில் அரசாங்கம்
1988-89 ஆம் ஆண்டு தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான எந்த பதிவுகளும் அரசாங்கத்திடம் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜேபால, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது நடந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் அல்லது விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
அதிகார பூர்வ பதிவுகள்
இது, 1989 பெப்ரவரி 8 ஆம் திகதியன்று மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் விடுதலைப் புலிகளால் தலதா மாளிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்குதல்களுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் மாளிகைக்கு முன்னால் உள்ள பிரதான சாலையை இப்போது பொதுமக்கள் அணுகுவதற்காக மீண்டும் திறக்க முடியுமா என்று கவிரத்ன வினவினார்.
இந்தநிலையில் அமைச்சர் விஜயபால தனது பதிலில், 1989 தாக்குதல் தொடர்பில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக மட்டுமே அறியப்பட்ட விபரம் இருப்பதாக கூறினார்.
இதனைத் தவிர எந்த அதிகார பூர்வ பதிவுகளோ அல்லது விசாரணை அறிக்கைகளோ கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தாக்குதல் குறித்து விபரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
