பிஸ்கட், சொக்லட் மற்றும் ஐஸ் கிறீம் விலைகள் குறித்து வெளியான தகவல்
பிஸ்கட், சொக்லட் மற்றும் ஐஸ் கிறீம் விலைகள் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகரிக்காது என இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கப் பிரதிநிதிகள் வர்த்தக விவகார அமைச்சருடன் அண்மையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது எதிர்வரும் மே மாதம் வரையில் விலைகள் உயர்த்தப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இனிப்புப் பண்டங்களை உற்பதி செய்வதற்கு தேவயைான மூலப் பொருட்கள் விலை அதிகரிக்கப்பட்டாலும் கோவிட் காலத்தின் பின்னர் இனிப்புப் பண்ட உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படவில்லை என சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
எனினும் வரையறுக்கப்பட்ட லாபத்துடன் இந்த கைத்தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். நவம்பர், டிசம்பர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இனிப்புப் பண்ட உற்பத்திகளுக்கு மிகவும் உசிதமான காலம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்திற்கு தேவையான இனிப்புப் பண்டங்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் புத்தாண்டு காலம் முடியும் வரையில் இனிப்புப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் மே மாதத்தின் பின்னர் எரிவாயு, மின்சாரக் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்பட்டாலோ அல்லது மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டாலோ இனிப்புப் பண்டங்களின் விலைகளை உயர்த்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam