அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்
அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே தற்போதைய கவனம் முழுமையாக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது சர்வதேச உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரானும் தனது சர்வதேச கடமைகளை மதித்து நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இது குறித்து மேலும் கூறியதாவது: அமெரிக்கா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடமைகளும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தங்களுக்குரிய பகுதியை நிறைவேற்ற அமெரிக்கா தவறியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை ஈரானும் கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களது கடமைகளை மீறிய பின்னர், அதற்கு ஈடாக நாங்கள் எந்தெந்தப் பகுதிகளில் எங்களது கடமைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்துவதை நிறுத்திக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தங்களது எண்ணெய் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தது மற்றும் புதிய தடைகளை விதித்தது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam