மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித சட்டச் சிக்கலும் கிடையாது!
மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது என சட்டத்தரணி மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று 27ஆம் திகதி ஹட்டன் பகுதியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து மலையக பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் நட்ட ஈடு பெற்றுக் கொள்வதிலும் நிவாரணங்கள் பெற்றுக் கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சட்டச் சிக்கல்கள்
”இதற்கு பிரதான காரணமாக இருப்பது காணி உரிமை இல்லாமையே. இதனால் இவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி விட்டு பின்னர் மறந்து விடுகின்றனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகப்பகுதியில் அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம் காணிகள் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையில் உள்ள சட்டங்கள் இடையூறாக காணப்படுவதாக ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை.
72 காணி சீர்திருத்த சட்டத்திலும் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தோட்டங்களை குத்தகைக்கு வழங்கும் போது அதில் காணி தொடர்பான சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு போதியளவு ஏற்பாடுகள் இருக்கின்றன.
அதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 பேச்சஸ் காணிகள் பெற்றுக்கொடுத்தாலே அது தற்போது உள்ள தரிசு நில அளவில் எட்டு வீதம்.” என குறிப்பிட்டுள்ளார்.