இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தகவல்
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
2 மாத காலத்திற்கு தேவையான எரிபொருள் விண்ணப்பங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
“எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளை விண்ணப்பம் செய்துள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
எரிபொருள் பற்றாக்குறை
அந்த விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எந்த காரணத்தாலும் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் உள்ள தகவலுக்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோலில் பெரும்பாலானவை போர் மண்டலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.
அந்த எண்ணெய் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
அதன் விநியோகஸ்தர்களிடம் பேசி அதை முழுமையாக உறுதிப்படுத்துகிறோம். டீசலும் அதே முறையில் தான் பெறப்படுகின்றது என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




