திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!
திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவை பதவி நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அவரைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு உள் கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பாக திறைசேரி செயலாளரை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி கேட்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விடுக்கப்படும் கோரிக்கை
மேலும் தெரிவிக்கையில், திறைசேரி செயலாளரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சில பிரிவுகள் கோருகின்றனவா என்ற கேள்விக்கு பதிலளித்த நிஹால் அபேசிங்க, அத்தகைய கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இருப்பினும், திறைசேரி செயலாளரை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மக்கள் அமைப்புகள் தொடர்ந்து விடுத்து வருகின்றன.
மேலும், நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதியும் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்றும், அவரும் அந்த அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சிவில் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan