மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 2ம் திகதி முதல் அரச பணிகளுக்கு பிரசன்னமாகவுள்ள அரச ஊழியர்களுக்கு மாத்திரம், பஸ்கள் அல்லது வேறு விதத்தில் தொழிலுக்கு செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் சேவைக்கு அழைப்பதானது கோவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது குறித்து பேசியுள்ள அவர்,
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனில் கோவிட் வைரஸ் பரவலுக்கு எதிராக போராட்டத்துடன் பொருளாதாரத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அத்தியாவசியமானதாகும்.
எனவே தேவையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இதனை தொடர்ந்தும் பேண முடியுமாயின் பாரதூரமாயின் நிலைமை இன்றி கோவிட் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
