செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு
பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில், செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
நிறுத்தப்படும் பேருந்து சேவைகள்
இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் செவ்வாய்க்கிழமை (28) முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இப்போது, பேருந்துகளை நட்டத்தில் இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, திங்கட்கிழமைக்குள் (27) வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு பச்சை கொடி காட்டப்படாவிட்டால், செவ்வாய்கிழமை (28) முதல் பேருந்து சேவையை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.





ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
