நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரை சிங்களத்தில் வெளுத்து வாங்கிய சார்ள்ஸ் நிர்மலநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,(Charles Nirmalanathan) நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களை கடுமையாக சாடியுள்ளார். தைரியம் இருந்தால் மக்களுக்கு முன்னால் சென்று பேசுமாறும் அவர் கூறியுள்ளார்.
"நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போதே நிர்மலநாதன் ஆளும் கட்சியினரை கடுமையாக சாடியுள்ளார். நீங்கள் சத்தமிடாமல் இருங்களேன். நீங்கள் மக்களுக்கு முன்னால் சென்று பேசுங்கள். ஜனாதிபதியை மக்கள் மத்தியில் சென்று பேச சொல்லுங்கள்.
இங்கு வந்து பொய்யாக சத்தமிட வேண்டாம். பொய்க்கு கூச்சலிடமால் அமைதியாக இருங்கள். சிங்கள மக்கள் மத்தியில் சென்று பேசுமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள்.
இங்கு வந்து பொய்க்கு சத்தமிட வேண்டாம். உங்களை போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நாட்டை அழித்தனர். மக்கள் வீதியில் இருக்கின்றனர். எமது மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் வீதியில் இருக்கின்றனர். நீங்கள் சத்தமிடாமல் இருங்களேன் ஐயா.
இவர்களை போன்ற நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களே துக்கத்தில் இருக்கின்றனர். வீதியில் இருக்கின்றனர். பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியவில்லை. பால் மா இல்லை. அரிசி இல்லை, பெட்ரோல் இல்லை, வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எரிவாயு இல்லை. எரிவாயு வெடிக்கின்றது.
இவர்கள் மக்களுக்கு முன்னால் சென்று பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு வெறுமனே சத்தமிட வேண்டாம். முடிந்தால், கிராமங்களுக்கு சென்று கூட்டத்தை நடத்தி பேசி பாருங்கள்.
முடிந்தால் பேசி பாருங்களேன். இங்கு வந்து பொய்யாக சத்தமிட்டு காட்ட வேண்டாம். ஜனாதிபதி பின்னால் இருக்கின்றார் என்பதற்காக இங்கு வந்து பொய்யாக சத்தம் போட வேண்டாம்.
உங்களுக்கு வாக்களித்த மக்களிடம் போய் கேளுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று. எமது மக்களுக்கு நாங்கள் நன்றாக சேவை செய்கின்றோம். எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சத்தமிடாமல் சும்மா இருங்கள் " என நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 8 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022