யாழிலிருந்து கொழும்புக்கான இரவு நேர பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்
தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ். மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
தனியார் பேருந்தின் உள்ளூர் சேவைபேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். அதே போல் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இறக்கப்படுவர்.
இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கும் செல்லும் நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கே.கே.எஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளிமாவட்டங்களுக்கான பயணத்தினை மேற்கொள்ளும் என்பதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இப் பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்குமுறையானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும், நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
