இலங்கை பெண்களுக்கு திருமண ஆசையை காட்டி பண மோசடி செய்த நைஜீரிய பிரஜை

CID - Sri Lanka Police Police spokesman Sri Lanka Police Sri Lanka Nigeria
By Steephen Sep 20, 2022 05:44 AM GMT
Report

போலியான அடையாளத்தை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து இலங்கை பெண்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த நைஜீரிய பிரஜை

இலங்கை பெண்களுக்கு திருமண ஆசையை காட்டி  பண மோசடி செய்த நைஜீரிய பிரஜை | Nigerian Nationals Who Cheated Sri Lankan Women

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நைஜீரிய பிரஜை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சமூக வலைத்தளங்களில் தான் ஐரோப்பாவில் வசிக்கும் மருத்துவர், பொறியியலாளர் எனக் கூறி முகநூல் ஊடாக இலங்கை பெண்களுடன் அறிமுகமாகி அவர்களை  திருமணம் செய்துக்கொள்ளவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், பரிசு பொருட்களை அனுப்புவதாக கூறி, சுங்க திணைக்களத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள பணம் தேவை தெரிவித்து பெண்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பணத்தை எடுக்க சென்ற போது பொலிஸாரிடம் சிக்கிய சந்தேக நபர்

இலங்கை பெண்களுக்கு திருமண ஆசையை காட்டி  பண மோசடி செய்த நைஜீரிய பிரஜை | Nigerian Nationals Who Cheated Sri Lankan Women

இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்ணொருவர் வைப்புச் செய்த பணத்தை மகரகமையில் உள்ள பணம் மீளப்பெறும் இயந்திரத்தில்( ATM) இருந்து எடுக்க சென்றிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினர், இப்படியான நிதி மோசடி சம்பந்தமான மேலும் சில நைஜீரிய பிரஜைகளை கைது செய்வதற்காக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US