லண்டனில் துப்பாக்கிச் சூடு - நால்வர் படுகாயம்! பொலிஸார் தீவிர விசாரணை
கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பொது மக்களின் உதவிகளையும் கோரியுள்ளனர்.
கிழக்கு லண்டனில் நேற்று இரவு 7 மணிக்கு நியூஹாம் பகுதி அப்டன் வீதியில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த நபர்களை மீட்ட மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், பொலிஸார் அவர்களின் நிலை குறித்த எந்த விவரமும் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காததால் இது பயங்கரவாத நிகழ்வாக கருதப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த இடம் அப்படியே உள்ளதாக பொலிஸார் கூறியுளளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பதற்காக நியூஹாம் நகரில் இன்று பிற்பகல் 3 மணி வரை பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிக நிறுத்தம் மற்றும் தேடல் அதிகாரங்களை வழங்கும் section 60 என்னும் உத்தரவு வழங்கப்பட்டது.
அத்துடன், குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரை அணுகும்படி பொது மக்களிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam