நியூசிலாந்தை சுக்குநூறாக நொறுக்கிய இருவர்! தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இருபதுக்கு20 போட்டியில் இந்திய அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி இருபதுக்கு20 போட்டி அகமதாபாத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்கள் குவித்தது.
விறுவிறுப்பான துடுப்பாட்டம்
இந்திய அணி சார்பில் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்ளடங்களாக 63 பந்துகளில் 126 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை திரிபாதி 44 ஓட்டங்களும், அணி தலைவர் ஹர்திக் பாண்டியா 30 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல், சோதி, மிட்செல் மற்றும் டிக்னர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
Umran Malik comes into the attack and Michael Bracewell is bowled for 8 runs.
— BCCI (@BCCI) February 1, 2023
A beauty of a delivery from Umran ?
Live - https://t.co/1uCKYafzzD #INDvNZ @mastercardindia pic.twitter.com/nfCaYVch4b
இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 7 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் மிட்செல் மட்டும் போராட, மறுபக்கம் சொற்ப ஓட்டங்களில் வீரர்கள் வெளியேறினர்.
அதிகபட்சமாக 35 ஓட்டங்கள்
துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக், பந்துவீச்சில் நியூசிலாந்தை நிலைகுலைய வைத்தார்.
மேலும் அர்ஷ்தீப், உம்ரான், மாவி ஆகியோரும் பந்துவீச்சில் மிரட்டியதால் நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
As comprehensive as it gets ?
— ICC (@ICC) February 1, 2023
India clinch the series 2-1 against New Zealand after a dominant display in Ahmedabad! #INDvNZ | ?: Scorecard: https://t.co/CR0CCRQdoZ pic.twitter.com/naNCNERIpN
இந்திய அணி சார்பில் அணி தலைவர் ஹர்திக் பாண்டியா 16 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபதுக்கு20 தொடரை கைப்பற்றியது.