03 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை திருத்த நடவடிக்கை: காஞ்சன விஜேசேகர
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுளார்.
இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு
மேலும், “மின் கட்டணத் திருத்தத்துக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கடந்த வாரம் மின்சார சபைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, அக்டோபர் 21 ஆம் திகதி முதல்,எதிர்வரும் சில மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை சுமார் 18 % சதவீதத்தினால் அதிகரித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எட்டியது” என தெரிவித்துள்ளார்.