விசேட மருத்துவர்களுக்கான புதிய சேவைப் பிரிவு - அமைச்சரவை ஒப்புதல்
விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம், சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மேலும் தரமான மற்றும் பொறுப்பான விசேட மருத்துவ சேவைகளைப் பெற வழிவகுக்கும் என்று விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மருத்துவ சேவை
மேலும், இந்தப் புதிய சேவைப் பிரிவு இலங்கையின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அதற்கான தேவையான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், அதை நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் விசேட மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் மருத்துவர் ஞானசேகரம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.