மெட்ரோ பேருந்து சேவைகளில் புதிய வழித்தடங்கள்: எட்டு புதிய நிறுத்தங்கள்
கொழும்பு நகர பயணிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மெட்ரோ போக்குவரத்து நிறுவனம் புதிய வழித்தடங்களில் எட்டு புதிய பேருந்து நிறுத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் மாகும்புர - கொழும்பு மற்றும் மாகும்புர - கடவத்தை வழித்தடங்களில் எட்டு புதிய நிறுத்தங்களைச் சேர்த்து, லங்கா மெட்ரோ போக்குவரத்து வியாழக்கிழமை(05) முதல் புதிய வழித்தட மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
லங்கா மெட்ரோ போக்குவரத்து நிறுவனம்
பயணிகளின் வசதியையும் அணுகலையும் மேம்படுத்தும் வகையில், இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகும்புர-கொழும்பு வழித்தடத்தில், கலல்கொட சந்தி, நைட்டா (ராஜகிரிய), ஆயுர்வேத சந்தி மற்றும் ஹெட்ஜஸ் கோர்ட் ஆகியவை புதிய நிறுத்தங்களில் அடங்கும். மாகும்புர–கடவத்தை வழித்தடத்தில், தெல்கந்த, ஓரியன் சிட்டி – தெமட்டகொட, தொரண சந்தி மற்றும் மஹர சந்தி ஆகிய இடங்களுக்கு இனி சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
வேலை, கல்வி மற்றும் பிற தேவைகளுக்காகப் பயணம் செய்யும் பயணிகளின் தினசரிப் பயணத்தை எளிதாக்குவதையும், முக்கிய நகர்ப்புறப் பகுதிகளில் இணைப்பை வலுப்படுத்துவதையும் இந்த விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று லங்கா மெட்ரோ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கருணா குழுவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள் - சிறையில் சுட்டு கொல்லப்பட்ட கருணாவின் சகா
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam