ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தலைமையில் அண்மையில் ஹோர்ட்டன் சமவெளி பூங்காவில் நடைபெற்ற விசேட களப் பரிசோதனை மற்றும் முன்னேற்ற ஆய்வுச் சந்திப்பின்போதே இந்த யோசனைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
கட்டண முறையை மாற்றியமைக்க
இதன்படி, இணையவழி நேர முன்பதிவு முறைமைமூலம் பூங்காவுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், முகாமையை மேம்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சுற்றாடல் பொறுப்புமிக்க சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டண முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான இந்தப் பூங்காவின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan