சியம் மகா நிக்காயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கதேரரிடம் ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி
புதிய இணைப்பு
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (23) பிற்பகல் கண்டி மல்வத்து மகாவிகாரையின் சியம் மகா நிக்காயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கதேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்கதேரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதேவேளை, அஸ்கிரிய மகாவிகாரையின் சியம் மகாநிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரையும் சந்தித்து ஆசி பெற்று கொண்டுள்ளார்.
After assuming the responsibilities of the presidency, I visited the Maha Nayaka of Malwatta Chapter of the Siam Sect Ven. Thibbatuwawe Sri Siddhartha Sumangala at Malwathu Maha Viharaya and Mahanayake of Asgiriya Chapter Ven. Warakagoda Sri Gnanarathana Thero, at Asgiriya Maha… pic.twitter.com/FfBdscUPIr
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 23, 2024
முதலாம் இணைப்பு
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்று(23) மேற்கொண்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களின் ஆசி
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை (23.09.2024) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து, அவர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
After assuming the responsibilities of the presidency, I worshipped the Tooth relic of Lord Buddha at the Temple of the Tooth in Kandy this (23) evening. pic.twitter.com/NcvvR4tXlj
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 23, 2024