மொட்டு கட்சியின் புதிய அரசியல் திட்டம் - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்றை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP), கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஏற்கனவே ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரியிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றை கலைக்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் மட்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
எவ்வாறெனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
