யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Oct 19, 2026 10:43 AM GMT
Report

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ.கிருபாகரன் தலைமையில் இன்றைய தினம் (19.10.2026) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இச்சேவையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் மூலம், புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுவதுடன், அரச சேவைகளை மக்களுக்கு அண்மையில் கொண்டு செல்லும் நடவடிக்கையும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் | New Motorcycle Registration Service Launched

வசதிகளை ஏற்படுத்தல்

இதன்போது அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச சேவைகளை மக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

இன்று முதல் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மோட்டார் வாகனங்களுக்கான பதிவுச் சேவைகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் | New Motorcycle Registration Service Launched

இதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றச் சேவைகள், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் ஒருநாள் சேவை மற்றும் வழமையான சேவை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை

இவற்றின் தொடர்ச்சியாகவே புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுச் சேவைகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியதாரர்கள் தமது விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்காக அநுராதபுரம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்கள் தமது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திலேயே விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் | New Motorcycle Registration Service Launched

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தற்போது போதிய இடவசதியின்றிச் செயற்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டு, வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின் அல்லப்பிட்டி பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் காணி திணைக்களத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணியில் அலுவலகக் கட்டடம் மற்றும் சாரதி பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பொதுமக்கள் மேலும் இலகுவாகவும் சிரமமின்றியும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் | New Motorcycle Registration Service Launched

யாழ். மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் - புதிய மோட்டார்சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் | New Motorcycle Registration Service Launched

மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள்! விநியோகத்தில் சிக்கல்

மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள்! விநியோகத்தில் சிக்கல்

இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் வருகை

இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் வருகை

5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US