தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாக்க கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் : அமைச்சர் விதுர உறுதி
நாட்டின் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விதுர குறித்த விடயத்தை முன்வைத்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
மேலும் குறிப்பிடுகையில், கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன.
2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில் “பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
